Monday, February 22, 2010

படிகளில் பயணம் நொடியில் மரணம்
படித்துக்கொண்டே பார்க்கிறேன் உன்னை
விளக்கம் புரிந்தது.......... ( படிகளில்
மட்டுமல்ல உன் பார்வையிலும் )

உன்னை சீண்டிய எறும்புகள்
நடை கட்டுகிறது
மருத்துவமனைக்கு தங்கள்
சர்க்கரை அளவை
சரி பார்க்க


பல அறிமுகங்கள்
அளவற்ற ஆனந்தஙகள்
ஆயிரம் நட்புகள்
அளவுகடந்த அன்புகள்
சிகரஙகள் உரசிட............
உள்ளம் உணர்ந்த உணர்வில்
உனை பார்த்த நான்
உயி் உணர்கிறென்


என் ஒவ்வொரு வினாக்களுக்கும்
புண்ணகைகளால் புள்ளி வைத்து
இலவசமாய் இனிமைகளை வரைகிராய்
என் ஒரசிரிப்புகளை ஒளித்துவைக்க
முடியவில்லை


சித்திரை மாத சில்லென்ற மழையின்
முதல் துளியாய் நீ.......!
சித்திரங்கள் உயிர் பெற்று சிரிக்கும்
முதல் புன்னஹையாய் நீ...!
உன் துளி புன்னஹையில் நான்
உறக்கமிழந்து என்
உருவம் மறந்தேன் !!!!

யாரிடம் கடன் வாங்கி இருக்கிறதோ
உன் புன்னஹை ........ இன்று
அதற்கு கந்து வட்டியாக
வாரி இரைகிறேன் நான்
என் வாத்தைகளை ........

தெரியவில்லை என் கற்பனைஹளுக்கு
நீ சிதறிவிடும் புன்னைஹைக்கு
உவமை வகுக்க

யாரோ என்று அறிமுகமாகி
நட்பிடம் அடிக்கலாம் தேடி
வார்த்தைகளில் தஞ்சம் புகுந்தோம்
விளக்கம் தெரியவில்லை உறவிற்கு
நீ என்னகானவள் என்பதை தவிர

உண்மை உறவுகளின் கேள்விக்கு
பதில் தெரியாமல் உலரும்
சொந்தகளுகிடையே எனக்காய்
கிடைத்தது உன் நட்பு
தெளிவான பதில் கொண்டு

உன் ஒரு நாள் நட்பில் உணர்ஹிறேன்
உயிர் காத்திருந்ததன் உணர்வை
எங்கோ என் மனதோரமாய் உயிர்
கொண்ட தவத்தை

இழக்க நேரிட்டது என் பார்வை
உன் விழியுடான போரில்
மறக்க நேரிட்டது என் மனம்
உன் முகம் பார்த்த பொழுதில்
பிறக்க நேரிட்டது என் கவிதை
உன் புன்னகை பார்த்த பொழுதில்
இழக்க நேரிட்டேன் என்னை
இறுதியில் நீ சிவந்த பொழுது


என் இதய குன்டத்தில்
வார்த்தை நெய் ஊற்றி
கவிதை யாகம் வளர்க்கிறேன்
உன்க்கான
கவிஞனாக வேண்டுமென....


உருவம் தெரியாதவளே
ஒவ்வொரு முறையும் கரைகிறேன்
பேனாவின் மையுடன் சேர்த்து நானும்
உன்ககான் கவிதை உருவாகும் போதுவார்த்தை பூக்கள் சேர்த்து
கவிதை மாலை தொடுத்து விட்டேன்
சூடிகொள்ளத்தான் நீயில்லை


தெப்ப்மாகியது என் தொண்டைக் குழி
உன்னிடம் பேசாத வார்த்தைகள்தேங்கியதால் -
அதில் இறந்து போனவை சில
கடைசி மூச்சுடன் பல


அழைத்தும் வரவில்லை சோகஙள்
அழையாமல் வருகின்றன சுகங்கள்
உன்னுடன் கை கோர்க்கையில்

சோகங்கள் எழுத்து பிழைபெற்று
சுகங்களாய் பதிகிறது என் அகராதியில்
நட்பை வாசித்து விட்டதால்


தமிழ் பிடித்தது
நட்பாராந்த பொழுது
தமிழ் அழகானது
உன்னிடம் அதை
பகிர்ந்த பொழுது

நட்பே
நீ ஒன்றும் கடல் அலை அன்று
கரை தொட்டு உடனே செல்வதற்கு
இமை அல்ல ஒரு நாள் அனைவதற்கு
சுவாசமும் அல்ல ஒரு நாள் ஓய்வெடுப்பதற்கு
உதவி அல்லநன்றி சொல்வதற்கு
நீ இரு வேறு பொருள்களுக்கான ஒப்பந்தம் அல்ல
நீ வரையிருக்க முடியா வரைமுரை